oviya shoping place reveled

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு சிறுவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர்.

தமிழ் சினிமாவில் எப்படி விஜய், அஜித், படங்களுக்கு ரசிகர்கள் கார்த்திருக்கின்றனரோ அதே போல் தற்போது ஓவியாவின் படங்களுக்கும் ஒரு தரப்பினர் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு, தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதே போல் ஒரு சில விளம்பரங்களிலும் அதிக தொகை கொடுத்து ஓவியாவை நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஓவியா ஷாப்பிங் செய்ய OMR வருகிறார் என்கிற விளம்பரம் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பலருக்கும் இது ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரம் என்று தெரிந்திருக்கும். ஆனால் எந்த வணிக நிறுவனம் என பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தற்போது இது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது, வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்ஷிகா மற்றும் தமன்னா நடித்து வரும் பிரபல நிறுவனத்திற்கு தான் ஓவியாவும் வருகிறாராம்.