oviya romantic dance with aarv

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும், எதாவது மாஸ் சாங் ஒளிபரப்பப்பட்டு தான், போட்டியாளர்கள் எழுப்பி விட படுகின்றனர். அது போல் நேற்று கஞ்சா கருப்பு விரும்பி கேட்டது போல், விஜயின் ”தீபாவளி தீபாவளி" பாடல் ஒளிபரப்ப பட்டது.

பாடல் போடப்பட்டதும் ஒவ்வொருவரும் தங்களுடைய நடன திறமையை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் நடிகை ஓவியாவை பற்றி சொல்லவே வேண்டாம் எப்போதும் போல் செம குத்து குத்தினார்.

இதுவரை பெண்களுடன் மட்டுமே நடனம் ஆடிக்கொண்டிருந்த ஓவியா, தீடீர் என பாத்ரூமில், ஆரவ்வை கட்டிப்பிடித்து நடனமாடினார். இது வரை மற்றவர்களால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவரும் கட்டி பிடித்து நடனமாடியது இவர்களது காதலை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது