நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இதுவரை எந்த ஒரு தலைமையையும் ஏற்காத ஜூலியை நீதிபதியாக பிக் பாஸ் அறிவித்தது.

இவர்களுக்கு பிக் பாஸ் செட்டிநாடு சமையல் செய்யக்கூறி அறிவுறுத்தப்பட்டது. சினேகன் அணியை சேர்ந்தவர்கள் செட்டிநாடு மீன் வறுவல் மற்றும் முட்டை மசாலா செய்தனர். சக்தி அணியை சேர்ந்தவர்கள் செட்டிநாடு காடை கறி மற்றும் மட்டன் மசாலா செய்தனர்.

நீதிபதியாக பொறுப்பேற்ற தோரணையில் மிகவும் கண்டிப்பானவராகவும், கொஞ்சம் திமிராக நடந்து கொண்ட ஜூலி இரு அணி செய்த உணவினை ருசித்து விட்டு சக்தி அணியை வெற்றி பெற்ற அணியாக அறிவித்தது.

தோற்ற அணியை சேர்ந்தவர்கள் ஜூலிக்கு ஒரு நாள் முழுக்க வேலைகள் செய்யவேண்டும் என்பது விதி அதன் படி ஜூலியை யார் தனக்கு என்ன வேலைகள் செய்யவேண்டும் என நிர்ணயித்தார். ஓவியாவை "சிவப்பு கம்பளம் விரிப்பவராகவும்". சினேகனை "தனக்கு சமையல் செய்துகொடுப்பவராகவும்". வையாபுரியை "எப்போதும் தன்னுடன் இருக்கும் நிழலாகவும்", கணேஷை "மசாஜ் செய்பவராகவும்" தேர்ந்தெடுத்தார்.

தனக்கு சிவப்பு கம்பளம் விரிக்க கூறி ஆர்டர் போட்ட ஜூலியை பழிவாங்குவது போல ஓவியா அவரை அதில் இருந்து இரண்டு முறை கிழே விழும்படி செய்துவிட்டார். ஓவியா இப்படி செய்தது அங்கிருந்த போட்டியாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தாலும். நெட்டிசன்கள் பலர் ஓவியாவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.