oviya request her fans
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே நடிகை ஓவியா விளையாடி இருந்தாலும் தன்னுடைய நல்ல குணத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையாக நின்று விட்டார்.
தற்போது 100 நாட்கள் நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரும் தற்போது பல ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தங்களுடைய பிக் பாஸ் அனுபவம் குறித்து அனைவருடனும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் ஓவியா சற்று வித்தியாசமாக தன்னுடைய ஓவியா ஆர்மி ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்படி ஒரு ரசிகரை சந்தித்து பேசும்போது தன்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதில் தயவு செய்து ஜூலியை இப்படி செய்யாதீர்கள், பாவம் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
.jpg)
ஓவியா தற்போது இப்படி கூற காரணம், ஜூலி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனமாடினார். நடனமாடி முடித்த பின் இவரை மேடைக்கு அழைத்து பேச கூறியபோது அங்கிருந்த ஓவியா ரசிகர்கள் பலர் ஜூலியை பேசவிடாமல் ஓவியா ஆர்மி, ஓவியா... ஓவியா... என கத்தி அந்த இடத்தில் இருந்து ஜூலியை விரட்டி அடித்தனர்.

இதனை கேள்விப்பட்ட ஓவியா தற்போது ஜூலியை இப்படி யாரும் நடத்த வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
