oviya reject famous comedy actor movie
'களவானி' படத்தில் அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை ஓவியா. தற்போது அனைவராலும் ரசிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார். இதற்கு முழுக் காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சியில் இவருடைய அழகை விட, ரசிகர்கள் பலர் இவருடைய நல் மனதையும், நேர்மையான குணத்தையும் பார்த்து தங்களையும் இவரின் ரசிகர் பட்டாளத்துடன் சேர்த்துக் கொண்டனர்.

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருந்தாராம். தற்போது பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால். அந்த காமெடி நடிகர் படத்தில் நடிக்க முடியாது எனக் கூறி பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

எப்படியும் ஓவியாவை வைத்து இயக்கினால் ரசிகர்களிடம் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பி இருந்த படக் குழுவிற்கு ஓவியா செய்த காரியம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
