Oviya refuses to act in part 2 of the art of lapse

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அசுர வரவேற்பைப் பெற்றவர் ஓவியா. இந்த வரவேற்பால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

இந்த நிலையில், இவர் கலகலப்பு படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல் கசிந்துள்ளது.

கடந்த 2012-ல் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், ஓவியா, அஞ்சலி, சிவா நடிப்பில் உருவான படம் ‘கலகலப்பு’.

இந்தப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இப்போது இந்தப் படத்தின் 2-ஆம் பாகத்தை சுந்தர் சி. எடுக்க உள்ளாராம். முந்தைய படத்தில் நடித்தே அதே நடிகர்கள் இதிலும் நடிக்க உள்ளனராம் ஆனால், ‘கலகலப்பு 2’ படத்தில் அதிக கிளாமராக நடிக்கச் சொன்னதால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா மீது ரசிகர்கள், மக்கள் என அனைவரும் அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக கிளாமராக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இந்தப் படத்தை மறுத்துவிட்டாராம் ஓவியா.

ஓவியாவின் பட வாழ்க்கையை பிக்பாஸுக்கு முன் என்று பார்த்தால் கிளாமர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இப்போ கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கு போல…