பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை ஓவியாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத, ரசிகர்கள் ஒரு மாதத்திற்குள்ளே சின்னத்திரையில் கிடைத்தனர்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய நேர்மை தான். அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள் இவரை பற்றி பலர் தவறாக பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர்களை பற்றி யாரிடமும் தவறாக பேசாமல் இருந்த குணம் அனைவரையும் இவருடைய ரசிகர்களாக மாற்றியது.

மேலும் இவர் ஆரவை காதலித்து, மனஉளைச்சலுக்கு ஆளாகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும்  சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்காக  தற்போது வரை இருந்து வருகிறார் ஓவியா. 

மேலும் இவர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்த போது, பலரும் ஆரவ் உனக்கு சரியானவன் இல்லை என்று கூறியும், ஆரவை காதலிப்பேன் என தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், தற்போது அவரே டுவிட்டரில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை சிங்கிள், சந்தோஷமாக இருக்கின்றேன்’ என கூறியுள்ளார். ஓவியாவிடம் இருந்து இப்படி ஒரு ட்விட்டை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலர்... நீங்கள் இப்போது தான் சரியான முடிவை எடுத்திருகிறீர்கள், என தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.