oviya participate vivo biggboss grand finale programme

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கணேஷ், சிநேகன், ஆரவ், ஹரீஷ் ஆகிய நால்வரில் வெற்றிவாகை சூடப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான விடை இன்று இரவுதான் தெரியவரும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசனுக்கும் இன்று இரவு நிகழ்ச்சித் தொகுப்பாளராக கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமாக எகிறிக் கிடக்கிறது.

19 போட்டியாளர்கள் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாளில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வர் என ஏற்கனவே கமல் தெரிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே உள்ளிருக்கும் நான்கு போட்டியாளர்களுடன் வெளியே அனுப்பப்பட்ட 15 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஓவியா 

சற்றுமுன் விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பாத்ரூம் உள்ளே உள்ள மேடையில் கெத்தாக ஓவியா அமர்ந்திருக்கிறார். ஆர்த்தி உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் அவரை சுற்றி நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு புகைப்படத்தில் ஆரவ் வீட்டினுள் பழைய ஹவுஸ்மேட்ஸுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஓவியா ஆர்மி 

பிக்பாஸ் விட்டைவிட்டு ஓவியா வெளியேறியது முதல் ஓவியா மீண்டும் எப்போது வருவார் என அவரது ஆர்மிக்காரர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் தான் மீண்டும் ஒரு போட்டியாளராக அந்த வீட்டிற்குள் செல்ல மாட்டேன் என ஓவியா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாளான இன்று ஓவியா பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது, ஓவியா ஆர்மிக்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைவி ரிட்டர்ன்ஸ் 

அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து தலைவி ரிட்டர்ன்ஸ் என கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது வெளியான புகைப்படங்களை பதிவிட்டு #ThalaiviReturns என டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

காயத்ரி,ஜூலி நடனம் 

இன்று! #VivoBiggBoss Grand Finale இன் முதல் ப்ரோமோ.. @Vivo_India#BiggBossTamilpic.twitter.com/dEd3OdihfN

— Vijay Television (@vijaytelevision) September 30, 2017
விஜய் டிவி வெளியிட்டிருக்கும் மற்றொரு ப்ரோமோவில் காயத்ரி, ஆர்த்தி, ஜூலி, சுஜா ஆகியோர் பிக்பாஸ் மேடையில் நடனமாடுகின்றனர். இதில் ஓவியா இடம்பெறவில்லை. இதனால் அவர் நடனமாடுவாரா? இல்லை ஒரு பார்வையாளராக மட்டும் கலந்து கொள்வாரா? என்பது தெரியவில்லை.