உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் முதலில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியாவை காதலிப்பது போல் நடந்து கொண்டு பின் காதலிக்க முடியாது என விலகினார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தற்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் இவர்கள் காதல் மலர்ந்துள்ளதாகவும், தாய்லாந்த், மற்றும் சென்னையில் உள்ள மால்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிய சில புகைப்படங்கள் வெளியானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குனர்களால் கவனிக்கப்பட்ட ஆரவ், தன்னை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்காமல் சிறந்த கதையை, தேர்வு செய்து நடிக்க துவங்கினார். 

இந்நிலையில் ஆரவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கும் படத்தில், ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்ஸ்ரீ ஏற்கனவே சாருஹாசன் நடித்த 'தாதா 87' என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆரவ் இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் நடிக்க உள்ள இந்த படத்தின் தலைப்பு வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில்  தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Joined hands with <a href="https://twitter.com/hashtag/dhadha87?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#dhadha87</a> fame <a href="https://twitter.com/vijaysrig?ref_src=twsrc%5Etfw">@vijaysrig</a> sir for his next project..Title to be revealed on Aug 9th..🙏🙏🙏</p>&mdash; Arav (@Nafeez_Arav) <a href="https://twitter.com/Nafeez_Arav/status/1022376450362552321?ref_src=twsrc%5Etfw">July 26, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>