oviya open talk for arav love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டவர் நடிகை ஓவியா. இவருக்காக தற்போது பலர் ரசிகர் மன்றங்களே துவக்கிவிட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இது வரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஓவியா, அண்மையில் பிரபல வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நேரடியாக உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எழுப்பிய ஒரு சில கேள்விகளுக்கு ஓவியா தெளிவாக பதில் கொடுத்தார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் எனக் கேட்டபோது, முதல் முதலாக வெளியேற்றப்பட்ட அனுயா பெயரைத் தான் ஓவியா சொன்னார். பின் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார்கள் என கேட்டதற்கு, ஒரு சில விதிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளதால் தற்போது என்னால் இதைக் கூறமுடியாது என்று கூறிவிட்டார்.

ஆரவை இப்போதும் காதலிக்கிறீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு, என்னை நேசிக்க இவ்வளவு பேர் இருக்கும் போது நான் ஏன் ஒருத்தரை மட்டும் நேசிக்க வேண்டும் என அதிரடியாக ஒரு பதிலைக் கூறினார். மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கொக்கு நெட்ட கொக்கு பாடலையும் பாடி அசத்தினார் ஓவியா...