Oviya next movie name vampire Official Announcement Released ...
‘காட்டேரி’ என்ற புதிய படத்தில் நடிகை ஓவியா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியாவிற்கு படங்களில் நடிக்க பல தயாரிப்பாளர்களிடம் இருந்து அழைப்புகள் குழிந்தன.
எல்லாவற்றையும் அவர் மறுத்துவிட்ட நிலையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தில் ஓவியா நடிப்பது தற்போது உறுதியாகிவிட்டது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ‘ஹரஹர மஹாதேவி’ பத்திரிகையாளர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த அரங்கில் ஞானவேல்ராஜாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
புதிய படத்திற்கு ‘காட்டேரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஓவியாவும் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இயக்குனர் டிகே இயக்கவுள்ளார்.
