பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, ஆரவை காதலிப்பதாக கூறி அனைவருக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து நான் உன் மேல் உள்ள காதலை மறந்து விட்டேன் நீயும் மறந்து விடு என சாதாரணமாக கூறியது பலருக்கும் வியப்பாக தோன்றியது.

இந்நிலையில் சில நாட்களாக ஓவியாவுக்கு ஆதரவாக பேசி அவரை காதலிப்பது போல  நடந்துக்கொண்டார் ஆரவ்.
இதனால் மீண்டும் ஓவியா ஆரவை காதலிக்க தொடங்கி விட்டார்.ஆரவ் எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே செல்வதும்,அவரை கொஞ்சுவதும் ஆரவுக்கு எரிச்சலை வரவைத்தது. 

சில நாட்களாக வீட்டுக்கு செல்லவேண்டும் என்று புலம்பி கொண்டேயிருந்த ஓவியா நேற்று விரக்தியின் உச்சத்துக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குதலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சினேகன் சக்தி கணேஷ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா காரில் வெளியே செல்லும் ஸ்டில் ஒன்று சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா என்று பலர்  டுவீட் செய்து வருகின்றனர். சிலர் அதை வதந்தி என்றும் கூறி வந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி  கமலுடன் மேடையில் ஓவியா அமர்ந்து பேசுவது போல ஒரு படம் வெளியாகியுள்ளது ஓவியா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.