பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, ஆரவை காதலிப்பதாக கூறி அனைவருக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து நான் உன் மேல் உள்ள காதலை மறந்து விட்டேன் நீயும் மறந்து விடு என சாதாரணமாக கூறியது பலருக்கும் வியப்பாக தோன்றியது.

இந்நிலையில் சில நாட்களாக ஓவியாவுக்கு ஆதரவாக பேசி அவரை காதலிப்பது போல  நடந்துக்கொண்டார் ஆரவ்.
இதனால் மீண்டும் ஓவியா ஆரவை காதலிக்க தொடங்கி விட்டார்.ஆரவ் எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே செல்வதும்,அவரை கொஞ்சுவதும் ஆரவுக்கு எரிச்சலை வரவைத்தது. 

சில நாட்களாக வீட்டுக்கு செல்லவேண்டும் என்று புலபி கொண்டேயிருந்த ஓவியா நேற்று விரக்தியின் உச்சத்துக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குதலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சினேகன் சக்தி கணேஷ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார்.

இது நடந்து ஒருசில நிமிடங்களில் ஓவியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா காரில் வெளியே செல்லும் ஸ்டில் ஒன்று சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா என்று பலர்  டுவீட் செய்து வருகின்றனர்.
 
ஓவியா வெளியே சென்றது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அதிகாரபூர்வமாக நாளை தான் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் முன்னணி செய்தியாளர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.