oviya kanavani moive official annoucement sivakarthikeyan
ரசிகர்களுக்கு பிடித்த ஓவியா:
நடிகை ஓவியாவை பிடிக்காத கோலிவுட் ரசிகர்கள் இருக்க முடியாது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய நல்ல மனதாலும் அழகாலும் கவர்ந்தவர் ஓவியா.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடியப்போது.... இந்த நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் பலர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர். 
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓவியா வெளியே வந்த பின், படப்பிடிப்புகளில் அவ்வபோது பிஸியாக நடித்து வந்தாலும். அடிக்கடி தனக்கு ஆதரவளித்த ரசிகர்களை சென்று சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
களவாணி:
ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் களவாணி, இந்த படத்தில் தான் விமலும் ஹீரோவாக அறிமுகமாகினார். இவரின் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது எனினும் தொடர்ந்து இவரால் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

காஞ்சனா:
ஓவியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் காஞ்சனா படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகர்த்திகேயன் அறிவிப்பு:
இந்நிலையில் ஓவியா தமிழில் முதல் முதலாக நடித்து வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனை உறுதி படுத்தும் விதத்தில் அதற்கான லோகோ மற்றும் தகவலை சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான 'மெரினா' படத்தில் ஓவியா தான் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
