Oviya join hand with Lawrance for his Kanchana 3
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'முனி - 3' திரைப்படத்தில் பிக்பாஸ் நாயகி ஓவியாவை நடிக்க வைக்கவிருக்கிறார்.
முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என அடுத்தடுத்து பேய் கான்செப்ட்டை கையிலெடுத்து இயக்குநராக அவதாரம் எடுத்து மாஸ் டைரக்டரானார் ராகவா லாரன்ஸ். வழக்கமான பேய்ப் பட கான்செப்ட்டையே மாற்றி காமெடி கலந்த த்ரில்லராக எடுத்து தனக்கென ஒரு இமேஜை உருவாக்கினார். முதல் மூன்று பாகங்கள் கொடுத்த வெற்றியால் மற்ற இயக்குனரின் படங்களிலும் ஹீரோ அவதாரமெடுத்தார்.

இந்நிலையில், முதல் மூன்று படங்களும் தாறுமாறு ஹிட் அடித்ததால் கடந்த மாதம் 'காஞ்சனா- 3 படத்தை நானே தயாரித்து இயக்கப் போகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார். விரைவில் யாரெல்லாம் இந்தப் படத்தில் பணியாற்றுவார்கள் என்ற தகவலை வெளியிடுவேன்' என்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஓவியா, காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் பிக்பாஸில் புகழ் பெற்று சுமார் ஒன்றரை கோடி ரசிகர்களைக் கொண்ட ஓவியா இப்படத்தில் நடிப்பதால் ஓவியாவின் ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் உள்ளனர்.
