oviya is mad aarav scolding

ஓவியா பரணிக்கு சப்போர்ட் செய்து காயத்திரியிடம் கேட்டதால் தன்னுடைய ஒட்டுமொத்த கோபத்தையும் ஓவியா மீது காட்டி வருகிறார் காயத்திரி.

இந்நிலையில் காயத்திரி ஆரவிடம் பேசும் போது ஓவியா தன்னுடன் எப்படி நடந்துக்கொண்டார் என மிகவும் ஏளனமாக கூறுகிறார்.

மேலும் தற்போதெல்லாம் ஓவியா என்னிடம் வருவதில்லை, நான் இதுவரைக்கும் லவ் பண்ணுனது கிடையாது... லவ் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியாது என நான் கூறியும், நான் யாரை பார்த்தாலும் லவ் பண்ணுவேன்னு சொல்லுவேன் அதே போல என்னையும், லவ் பண்ணுறதா சொன்னாள்.

லவ் பண்ணனும் என்றால் கண்டிப்பா ஒருத்தவங்கள புரிஞ்சிக்கணும், அதுக்கு ஆறு மாதமாவது தேவை படும்... நான் எதுமே சொல்லலைனு "நமக்குள் காதல் முறிஞ்சி போச்சி, நான் சோகமா இருக்கேன்னு சொல்லுறா"... அவ ஒரு லூசு அக்கா என ஓவியாவை பற்றி அனைவரிடமும் குறை கூறிக்கொண்டிருந்த ஆரவ் காயத்திரியிடமும் அசிங்கப்படுத்தினார்.