ஓவியா பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது, அவரை ஒதிக்கியவர்களில் ஒருவர் ரைசா. ஓவியா சாதாரணமாக எது செய்தாலும் அதனை பெரிது படுத்தி "எனக்கு உங்களிடம் பேச இஷ்டம் இல்லை, தயவு செய்து என்னிடம் பேச வேண்டாம் என ஓவியாவை அசிங்கப்படுத்தியுள்ளார்".

இந்நிலையில், சினேகனிடம் வந்து பேசும் ரைசா... என்னுடைய கனவில் ஓவியா வந்ததாக சொல்கிறார். சினேகனும் சிரித்துக்கொண்டு என்ன கனவு என கேட்க. 

நான் பெங்களூரில் தற்போது இருக்கும் வீட்டை காலி செய்ய, வேறு வீடு தேடுகிறேன், அதற்கு ஓவியாவும் தன்னுடன் வந்து உதவுகிறார் என கூறுகிறார். 

இதனை கேட்டதும் சினேகன், கண்டிப்பாக ஓவியா இது போன்ற உதவிகளை செய்வார் என மெய் சிலுக்க கூறுகிறார்.