oviya full stop the love rumors

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வரவேற்பிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓவியா தற்போது அவருடைய வீட்டில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே தனக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை என்றும் என்னை ஆதரித்த அனைவருக்கு நன்றி என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறிய பிறகு ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் வெளியேற்ற பட்டனர். அவர்களை தயவு செய்து எதிரியாக பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக கூறி தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பின் நான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வருவேனா..? என பலர் கேட்கின்றனர், ஆனால் நான் கண்டிப்பாக ஒரு போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போக மாட்டேன், நீங்கள் திரைப்படங்களில் என்னை பார்க்கலாம், தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்து, தன்னுடைய செல்ல பிராணியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, ஆராவை உண்மையாக காதலிக்கிறீர்களா, என்றும் தற்போது பிக் பாஸ்ஸை விட்டு வெளியேறியதும் நான் ஆரவை மறந்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளிவந்து. ஆனால் தற்போது வரை நான் ஆரவை காதலிக்கிறேன் என்றும் என்றுமே உண்மை காதல் தோற்காது என நம்புவதாக கூறி, ஓவியாவின் காதல் பற்றி எழுப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.