oviya fans scolding kushboo

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துக்கொண்டதன் மூலம் கோலிவுட்டில் அவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது. பலர் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஓவியாவுக்கு மிக தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சுந்தர் சி தற்போது அவருடைய கனவுப்படமான 'சங்கமித்ரா' படத்தை சிறிது நாட்கள் கிடப்பில் போட்டு விட்டு. இவர் இயக்கி மிக பெரிய வெற்றி பெற்ற கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனை உறுதி செய்யும் விதத்தில் நடிகையும் சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சுந்தர் சி கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்து இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் நடிகைகள் ரெஜினா, நிக்கிகல்ராணி நடிக்க உள்ளனர்" என்று கூறினார்.

இதற்கு ஓவியா ரசிகர்கள் பலர், எங்கள் தலைவி ஓவியா தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கூறி குஷ்புவை தாறு மாறாக திட்டி வறுத்தெடுத்து விட்டனர். ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் ஓவியா இந்த படத்தில் நடிப்பாரா இல்லையா என பொறுத்திருந்து பாப்போம்.

Scroll to load tweet…