பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த நபராக உள்ளவர் நடிகை ஓவியா அதற்கு காரணம் அவர் எந்த வித நயவஞ்சக புத்தியும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகி வருவதுதான்.

இவர் ஏற்கனவே இரண்டு முறை எலிமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டும், இவரின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்ட ரசிகர்களை பலர் இவருக்கு கோடிக்கணக்கில் வாக்குகளை அள்ளி கொடுத்து இவரை எலிமினேட் செய்ய விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

ஓவியா,  காயத்ரி மற்றும் நமிதாவை எதிர்த்து பேசுகிறாள், யாரையும் மதிப்பதில்லை என கூறி இவரை இந்த வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதிலும் பச்சோந்தி ஜூலி அழும் போது ஆதரவு கொடுத்த ஓவியாவை எப்படி துரத்தலாம் என ஐடியா கொடுக்கிறார்.

ஒரு நிலையில் இவர்களுடைய நடவடிக்கைகளை கண்டு மனம் வருந்தி ஓவியா அழும் காட்சி போன்றவை தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை கண்ட நெட்டிசன்கள் பலர்... ஓவியா நீ வறுத்த படதாம்மா... நாங்க உன்ன ஜெயிக்கவைக்கிறோம் என தன்னுடைய வீட்டுப்பெண்ணாகவே நினைத்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.