‘இன்னும் சில மாதங்கள் கழித்து என்னைப்பற்றி கிசுகிசு எழுத வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று ஒரு ஹாட் சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின் டாப் டென் நடிகைகள் பட்டியலில் கூட இடம் பிடிக்கமுடியாமல் பரிதாப நிலையில் இருந்த ஓவியா, ஆரவுடனான காதல் கிசுகிசு செய்திகளில் மட்டுமே பரபரப்பாக இடம் பெற்றார். ஆனால் சமீபத்தில் ’90 எம்.எல்.’, ‘களவாணி 2’, ’காஞ்சனா 3’ ஆகிய படங்கள் வரிசையாக ஓவியாவின் அபார்ட்மெண்ட்ஸ் கதவைத் தட்டியிருக்கின்றன.

இந்நிலையில் மிகவும் பூரிப்பாக காணப்படும் ஓவியா, ‘தற்போதுகமிட் ஆகியிருக்கும் மூன்று படங்களுமே என்னை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் படங்கள் என்று உறுதியாகச் சொல்லுவேன். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘களவாணி 2’வில் கமிட் ஆன பிறகுதான் களவாணி’ முதல் பாகத்தின் அருமையே புரிகிறது. அதே போல் ‘90 எம்.எல்’ படத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் ஐந்து பெண்கள் படம் முழுக்க கும்மாளம் அடிக்கிறோம். மக்கள் ரசித்துக்கொண்டாடக்க்கூடிய கும்மாளமாக அது இருக்கும்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னர் படித்தால் போரடிக்கிற அளவுக்கு என்னையும் ஆரவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்துவிட்டன. இந்த மூன்று படங்களும் முடிந்த உடன் இந்த கிசுகிசுக்களுக்கு ஒரு சுபமான முடிவு கிடைக்கும்’ என்று ஆரவுடனான திருமணத்தை ஏறத்தாழ உறுதி செய்கிறார் ஓவியா.