பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்து போட்டியாளர்களுக்கு அனைத்து விதமான கலைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தாய் வாழ்த்தில் துவங்கி, பழமொழி, நாடகம், பாடல், நடனம் என அனைத்தையும் அறியும்படி செய்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

அனைவரும் ஒரு அளவிற்கு நடனம் ஆடினாலும் கவிஞர் சினேகனுக்கு மட்டும் நடனம் வரவில்லை. இதனால் அவரை நடனம் கற்றுக்கொள்ளும் படி பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர் அவருக்கு நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் நடனம் கற்று கொடுப்பார் எனவும் கூறப்பட்டது.

இதனை பிக் பாஸின் தற்போதைய தலைவரான, சக்தியை அழைத்து கவிஞர் சினேகன் முறையாக நடன பயிற்சி எடுத்துக்கொள்வது இல்லை என்றும் விரைவில் அவர் நடனம் கற்றுக்கொள்வது அவசியம் என பிக் பாஸ் கூறியது.

இதனால் காயத்ரி சினேகனுக்கு முறையாக நடன பயிற்சி கொடுத்தார். இதில் கணேஷ் வெங்கட்ராமும் பங்கேற்று காயத்ரியிடம் நடனம் கற்றுக்கொண்டார். 

இவர்கள் நடனம் கற்றுக்கொண்டதை பாத்ரூம் கிளீன் செய்தபோது பாத்துக்கொண்டிருந்த ஓவியா தன்னையே மறந்து அவர்களை போலவே செம டான்ஸ் போட்டார். காயத்ரியின் நடனத்தை விட ஓவியா டான்ஸ் பலராலும் ரசிக்கப்பட்டது.