பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, ஆரவை காதலிப்பதாக கூறி அனைவருக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து நான் உன் மேல் உள்ள காதலை மறந்து விட்டேன் நீயும் மறந்து விடு என சாதாரணமாக கூறியது பலருக்கும் வியப்பாக தோன்றியது.

இந்நிலையில் சில நாட்களாக ஓவியாவுக்கு ஆதரவாக பேசி அவரை காதலிப்பது போல  நடந்துக்கொண்டார் ஆரவ்.
இதனால் மீண்டும் ஓவியா ஆரவை காதலிக்க தொடங்கி விட்டார்.ஆரவ் எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே செல்வதும்,அவரை கொஞ்சுவதும் ஆரவுக்கு எரிச்சலை வரவைக்கிறது.

நேற்று சினேகனிடம் பேசிக்கொண்டிருந்த ஆரவ், "எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்றா.. எரிச்சலா இருக்கு.. இவ இப்படி பண்றதால என் பர்சனல் வாழ்க்கை பாதிக்கும்" என்று புலம்பினார்.

ஒரு கட்டத்தில் பிக் பாஸிடமே சென்று முறையிட்ட ஆரவுக்கு ஒவியாவிடமே இதை பற்றி பேசுங்கள் என்று கூறுகிறார் பிக் பாஸ்.

இதையடுத்து ஓவியாவை வெளியே அழைத்த ஆரவ், "நீ இப்படி பண்றது நல்லா இல்ல... பாக்குறவங்க தப்பா நெனைப்பாங்க.. இதை நா ஏற்கெனவே உன்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்" என்று கூறினார்.

எதையும் காதில் வாங்காத ஓவியா "சரி நான் ஒதுங்கி விடுகிறேன்.. ஆனா நா கொடுத்ததை திருப்பி கொடு.. அதை கொடுத்தால் நான் போய் விடுகிறேன்" என்று கூறுகிறார்.

அவர் எதை திருப்பி கொடுக்க சொல்கிறார் என்று தலையை பிய்த்து கொள்கின்றனர் நெட்டிசன்கள்.
நேற்று முன்தினம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் சமைத்து கொண்டிருக்கும்போது அருகில் ஓவியாவும் ஆரவும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சுற்றி முற்றி திரும்பி பார்த்து கொண்டிருந்த ஓவியா சினேகன் சற்று நகர்ந்து சென்றதும் ஆரவை அவசரமாக நெருங்கினார். உடனே விளம்பர இடைவேளை போடப்பட்டது.

எனவே இதை வைத்து பார்க்கும்போது ஓவியா ஆரவிடம் திருப்பி கேட்டது முத்தமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.