oviya and arav love controvercy
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவிற்கு தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆரவ் தன்னை பிரமோஷன் செய்து கொள்ள பல ஊடகங்களுக்கும் வார இதழ்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆரவ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் ஓவியா உங்களை பிக் பாஸ் வீட்டில் இருந்த போது உருகி உருகிக் காதலித்தாரே .. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள ஆரவ், அந்தக் காதல் பற்றி எனக்குத் தெரியாது அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று பதில் கொடுத்துள்ளார்.

ஆரவ் இப்படி பதில் கொடுத்துள்ளது ஓவியாவின் காதல் பொய் என்று கூறுவது போலவும், ஓவியாவை அவமானப் படுத்துவது போலவும் உள்ளது என்றும் கூறி ஓவியா ரசிகர்கள் ஆரவ் மீது செம கோபத்தில் திட்டி வருகின்றனர்.
இவ்வளவும் பேசி விட்டு ஒரு வேளை தனக்கு ஓவியாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஓவியாவுக்கு ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் ஆரவ்.
