ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சிலநாட்களிலேயே ஆரவை காதலிப்பதாக கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் கூட இந்த ஜோடிகள் இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர்.

இந்நிலையில் ஆரவ் எதையோ பற்றி சிந்தித்து கொண்டிருக்கும்  போது, ஆரவ்   இடம்  கொஞ்சம்  தனியாக  பேச வேண்டும் என ஜூலியை அந்த இடத்தில இருந்து துரத்தி விட்டு விட்டு, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா என கூறி பக்கத்தில் அமர்ந்தார் ஓவியா.

நான் உன்னை காதலிப்பதாக கூறினேன் இல்லையா, அதெல்லாம் இப்போ இல்லை எல்லாத்தையும் மறந்து விடு. எனக்கு எல்லாம் போச்சு. எதுவும் இல்லை. நான் தெளிவாக இருக்கேன். நாம நண்பர்கள் தான் சரியா. எல்லாத்தையும் விட்டு விடுவோம்.

இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்போது இதைக் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஆரவ் சென்று விட்டார்.