oviya again enter in bigboss 2
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் மனதை வென்று, பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் நடிகை ஓவியா.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படக்காரணம். இவர் எந்த போலித்தனமும் இன்றி உண்மையாக நடந்து கொண்டார் என்பதால் தான். ஓவியா தான் பிக் பாஸ் பட்டதை வாங்க வேண்டும் என மக்கள் பலர் ஆசைப்பட்டாலும். 
ஓவியா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரவ் என்கிற மாடலை காதலித்து, இந்த காதல் தோல்வியடைந்ததால் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஓவியா, பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்துகொள்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. எனினும் ஓவியா, இந்த புகைப்படத்தில் வாட்ச் அணிந்துள்ளதால், இவர் கெஸ்ட்டாக தான் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் வாட்ச், செல்போன் உள்ளிட்ட எந்த பொருட்களையும் உடன் கொண்டு செல்ல கூடாது என்பது விதிமுறை.
