Oviya again enter in big boss home

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் முதலில் எதிர்பார்க்கப்பட்டவர் ஜூலியாக இருந்தாலும், நாளடைவில் சிறியவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ஓவியா. 

இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களின் மனதை வென்றாலும், மற்ற போட்டியாளர்களால் எதிரியாக பார்க்கப்பட்டு. ஒதுக்கப்பட்டும், ஆரவ் மீது ஏற்பட்ட காதல் தோல்வியடைந்ததால் மனம் வெறுத்து தற்கொலை வரை முயன்று வெளியேறினார்.

மேலும் மீண்டும் மற்ற போட்டியாளர் திரும்ப வந்த போது கூட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றார். ஆனால் விரைவில் இந்த நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் யார் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாப்போம்.