over the age of 18 have come to this movie - Director request ...
‘ஹர ஹர மகாதேவி’ படத்திற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் வரவும் என்று அதன் இயக்குநர் கேட்டுக்கொண்டார்.
நடிகர் கௌதம் கார்த்தியை வைத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய படம் ‘ஹர ஹர மகாதேவி’. இந்தப் படத்தின் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
கௌதம் கார்த்தி நடிப்பில் இதற்குமுன் வெளியான ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றன.
அடுத்ததாக, ‘ஹர ஹர மகாதேவகி’ என்ற படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்துக்கு, ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து, இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், ‘‘இந்தப் படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும். தயவு செய்து, குழந்தைகளை இந்த படத்திற்கு அழைத்து வராதீர்கள்.
நாங்களாக விரும்பிக் கேட்டுத் தான், ‘ஏ’ சான்றிதழை வாங்கினோம். அதேநேரத்தில், பெண்களை அவமதிப்பது போன்ற எந்த காட்சிகளும், வசனங்களும் இந்தப் படத்தில் இடம் பெறவில்லை.
இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு முக்கியச் செய்தியை சொல்லும் படமாக, இது இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
