Asianet News TamilAsianet News Tamil

சிறப்பு விருதை தட்டிச் சென்ற ‘ஒத்த செருப்பு’... ஒரே நேரத்தில் பார்த்திபனுக்கு கிடைத்த டபுள் சர்ப்ரைஸ்...!

பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

otha seruppu size 7 parthiban won national award
Author
Chennai, First Published Mar 22, 2021, 5:12 PM IST

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2013ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

otha seruppu size 7 parthiban won national award

சிறந்த தமிழ் படத்திற்கான விருது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கும், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப்பெற்ற விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

otha seruppu size 7 parthiban won national award

அதேபோல் பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு சிறப்பு தேசிய விருது, அந்த படத்திற்கு சிறப்பாக ஒலிப்பதிவு செய்ததற்காக ரசூல் பூக்குட்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆஸ்கர் விருதுவரை சென்ற பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு தற்போது மத்திய அரசு இரண்டு விருதுகளை அறிவித்துள்ளதால், நடிகர் பார்த்திபன் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்துள்ளார்.           

Follow Us:
Download App:
  • android
  • ios