William Hurt : அடுத்த வாரம் வில்லியம் ஹர்ட் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென உயிரிழந்ததுள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

மேடை நாடகங்கள் மூலம் பிரபலம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேடை நாடகங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் வில்லியர் ஹர்ட். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘ஆல்டர்டு ஸ்டேட்ஸ்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்த இவர் முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

2 முறை ஆஸ்கர் விருது

அதை தொடர்ந்து கோர்கி பார்க், கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் மேன், புராட்காஸ்ட் நியூஸ், ஹல்க் இரண்டாம் பாகம், சிவில் வார் போன்ற ஹாலிவுட் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளார் வில்லியம் ஹர்ட். குறிப்பாக கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் மேன், எ ஹிஸ்ட்ரி ஆஃப் வயலன்ஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக இவருக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. 

திடீர் மறைவு

இந்நிலையில் நடிகர் வில்லியம் ஹர்ட் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 71. அடுத்த வாரம் வில்லியம் ஹர்ட் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென உயிரிழந்ததுள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Parithabangal Sudhakar : யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ சுதாகருக்கு திருமணம்! நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார்