ஒரே நாளில் தன்னுடைய கண் அசைவு மூலம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் மலையாள நடிகை பிரியாவாரியார். இதனால் இவர் நடித்த 'ஒரு அடார் லவ்' திரைப்படமும் அனைவர் மத்தியிலும் பிரபலமானது. இந்த படத்தை ஓமர் லுலு இயக்கியுள்ளார், மேலும் ’ஒரு அடார் லவ்’ படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இதில் ரோஷன் அப்துல் ரஹூப், அஷிஷ் வித்யார்த்தி உட்படப் பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கும் மிசெல் அன்னுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் மிசெல் அன்-னின், அம்மாவும் உறவினர்களும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் மனரீதியாக கொடுமைப் படுத்து பாலியல் தொல்லை கொடுத்து கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் இதனால் மிசெல் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இது தொடர்பாக, மிட்செல் கையெழுத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள திரிபுனிதுரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் அதை மறுத்துள்ளார் மிசெல். தன் அம்மாவும் உறவினர்களும் தன்னைத் தாக்கவில்லை என்றும் பாலியல் தொல்லை ஏதும் இல்லை என்றும் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும்  கூறியுள்ளார். இதை அவர் அம்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.