ஒங்கள போடணும் சார் என்கிற பட டைட்டிலை ஓ.பி.எஸ் எனச் சுறுக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷ் வம்பிற்கு இழுத்துள்ளார்.

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு, 90 ml  அடல்ட் சமாச்சாரம், இரட்டை அர்த்த வசனம் தூக்கலாக படம் வருவது ட்ரெண்ட் ஆகி விட்டது. அந்தவகையில் அடுத்த படம் உங்கள போடணும் சார். ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வம்பிற்கு இழுத்துள்ளனர். பட டைட்டிலில் நடுவிரலை நீட்டி வேறு அர்த்தம் கொடுக்கும் வகையில் டிசைன் செய்துள்ளனர். படத்தின் தலைப்பு அதன் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இந்தப்படத்தை ஜித்தன் ரமேஷ் தயாரித்துள்ளார்.  

அடுத்து உங்கள போடணும் சார் என்கிற டைட்டிலை OPS எனச் சுறுக்கி உள்ளனர். ஓ.பி.எஸ் என்றால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்பது பட்டிதொட்டியெங்கும் தெரியும் நிலையில் ஓ.பி.எஸ் என சுறுக்கி அவரை வம்பிற்கு இழுத்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர்,’’ விஜய் சேதுபதி  இது போல ஒரு டீஸர் மற்றும் போஸ்டர் ரிலீஸ் பண்றேன்னு சொல்லி அடுத்த நாள் போஸ்டர் பாத்து அதிரிச்சி ஆகிட்டு.... நான் ரிலீஸ் பண்ணமாட்டேன்னு அறிவிச்சாரு. 

அப்பா நல்ல தயாரிப்பாளர், அண்ணனும் நடிகர். தானும் ஒரு நடிகர். இருந்தும், இவர் இதை இன்னும் கவனிக்கவில்லையா இல்லை..? இது வெறும் போஸ்டர் தானே அப்படினு விட்டுட்டாரா..? இளைஞர்கள் சமுதாயம் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் இதுபோன்ற சினிமாகாரர்களின் படம் வெளிவராமல் தடை செய்து 'சட்டம் போடணும்'’ என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.