தமிழகத்தை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்,ஏ சந்திரசேகர் தெரவித்துள்ளார். மத்திய அரசு விருது கொடுத்தால்தான் தமிழுக்கு பெருமை என்று இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன் அவர்களின் 73 வது பிறந்த நாள் விழா சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்,ஏ, சந்திரசேகர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த அவர், தமிழன் என்பதில் தான் கர்வப்படுவதாக கூறினார்,  மத்திய அரசு தமிழ் திரைப்படங்களுக்கு விருது கொடுக்காததை எண்ணி வருத்தப்படதேவேயில்லை என்றார், 

மத்திய அரசு விருது கொடுத்துதான் தமிழ் பொருமைபடப்போவதில்லை ஏற்கனவே பெருமைக்குறியதாக தமிழ் உள்ளது. வட இந்தியாவில் இந்தி சினிமாத்துறையில் கொடிக்கட்டி பறக்கும்  முக்கிய கலைஞர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான் என்றார், எனவே தமிழன் என்று சொல்வதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றார். தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் அதை காப்பாற்ற நாம் சில முயற்ச்சிகளை எடுத்ததின் விலைவாக தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

அரசியலைப்பொருத்த வரையில் தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார். ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலில் குதிக்க அச்சாரமாக மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்திவரும் நிலையில் அவரது தந்தையின் பேச்சு விஜய் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளாரோ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.