on vijay birthday there is double treat!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங், தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. மருத்துவர்களாக நடிக்கும் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 22ஆம் தேதி விஜய்க்குப் பிறந்த நாள். அன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. அத்துடன், அன்று இன்னொரு இன்ப அதிர்ச்சியும் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்புதான் அது. 

விஜய்யின் அடுத்த படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகிறார்

என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கிறது.