Asianet News TamilAsianet News Tamil

Minister Roja : எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க மேடம்... நடிகை ரோஜாவிடம் அடம்பிடித்து அட்ராசிட்டி செய்த முதியவர்

Minister Roja : அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதை அடுத்து, நடிகை ரோஜா புத்தூர் மண்டலத்தில் உள்ள கிராமத்தில் கள ஆய்வு செய்தார்.

Oldman funny request to andhra minister Roja
Author
Andhra Pradesh, First Published May 20, 2022, 9:17 AM IST

நடிகை ரோஜா, 1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் சினிமாவை ஓரங்கட்டிய அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.

சமீபத்தில் ஆந்திர மாநில அமைச்சரவை புதுப்பிக்கப்பட்ட போது நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டதை அடுத்து, நடிகை ரோஜா புத்தூர் மண்டலத்தில் உள்ள ஒட்டிகுண்டல என்கிற கிராமத்தில் கள ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Oldman funny request to andhra minister Roja

அப்போது ஒரு வீட்டில் இருந்த முதியவரிடம், உங்களுக்கு நலத்திட்ட உதவிகள் எல்லாம் கிடைக்கிறதா என நடிகை ரோஜா கேட்க, அதற்கு அந்த முதியவர் பென்சன் மட்டும் தான் கிடைக்கிறது, மற்றவையெல்லாம் கிடைக்கவில்லை எனக் கூறி உள்ளார். உடனே உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? மனைவி என்ன செய்கிறார் என ரோஜா கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த முதியவர், எனக்கு மனைவி குழந்தைகள் இல்லை, அதுதான் பிரச்சனை, தயவுசெய்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க மேடம் என கேட்டுள்ளார். இதைக்கேட்ட நடிகை ரோஜா, அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கலேனா என்னால உதவி பண்ண முடியும், நான் எப்படி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... நெட்பிளிக்ஸ், அமேசான்-லாம் ஓரம்போங்க.. புதிதாக ஓடிடி தளம் தொடங்கிய அரசு- கலக்கத்தில் தனியார் டிஜிட்டல் தளங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios