Asianet News TamilAsianet News Tamil

நெட்பிளிக்ஸ், அமேசான்-லாம் ஓரம்போங்க.. புதிதாக ஓடிடி தளம் தொடங்கிய அரசு- கலக்கத்தில் தனியார் டிஜிட்டல் தளங்கள்

CSpace OTT : நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், சோனி லிவ் போன்ற தனியார் ஓடிடி தளங்களே இதுவரை இயங்கி வந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளது. 

Kerala government launch indias's first state owned OTT platform CSpace
Author
Tamil Nadu, First Published May 20, 2022, 8:27 AM IST

கொரோனா பரவலுக்கு பின் விஸ்வரூப வளர்ச்சி கண்ட ஒரே பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் தான். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, டைம் பாஸ் பண்ண உறுதுணையாக இருந்தது ஓடிடி தளங்கள் தான். அந்த சமயத்தில் திரையரங்குகளும் மூடப்பட்டதால், புது படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டன.

இதனால் சினிமா துறையில் ஓடிடி-யும் ஒரு அங்கமாக மாறி உள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லல்படும் நிலைமை போய், நல்ல கதைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரு தளமாகவும் ஓடிடி உள்ளது.

Kerala government launch indias's first state owned OTT platform CSpace

இதுவரை நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், சோனி லிவ் போன்ற தனியார் ஓடிடி தளங்களே இயங்கி வந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக கேரள மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளது. நாட்டிலேயே மாநில அரசு ஒன்று ஓடிடி தளம் தொடங்குவது இதுவே முதன்முறை.

அந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் (CSpace) என பெயரிட்டுள்ளனர். இந்த ஓடிடி தளம், கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். மற்ற ஓடிடி தளங்களைப் போல் மொத்தமாக கட்டணம் செலுத்தாமல், குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் வகையில் இந்த ஓடிடி தளம் அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் மலையாள திரைப்படத்துறை அடுத்தகட்டத்திற்கு செல்லும் என அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Samyuktha Hegde :டூபீஸில் டூ மச் கிளாமர்! திடீரென பிகினி போஸ் கொடுத்து ரசிகர்களை பக்குனு ஆக்கிய கோமாளி நடிகை

Follow Us:
Download App:
  • android
  • ios