பிரபல மலையாள நடிகை சாராத நாயர் உடல்நல குறைவு காரணமாக இன்று, காலமானார். இவருக்கு நடிகர் மோகன் லால் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சமீப காலமாக தொடர்ந்து, பாலிவுட், கோலிவுட். டோலிவுட், மாலிவுட் ஆகிய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களின் மறைவு ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி உலக அளவில் பிரபலமான பாடகர் எஸ்.பி.பியின் மறைவு இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மறைவுக்கு அணைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களையும் மிகவும் பாதித்த நிலையில், மற்றொரு துக்க செய்தி தற்போது வந்துள்ளது.

பல முன்னணி நடிகர்களின் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை சாரதா நாயர். 92 வயதாகும் இவர், வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக இன்று (செப்டம்பர் 29) ஆம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.