old south indian actress krishnakumari death

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் பழபெரும் நடிகை சௌகார் ஜானகியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

85 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதி பட்டு வந்ததாகவும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் இவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகுமாரி, தமிழ் ,தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'திரும்பிப்பார்', 'துளிவிஷம்' ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

மறைந்த நடிகை கிருஷ்ணகுமாரியின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடைய மரணம் குறிந்த அறிந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருடைய குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.