நடிகர் விஜய் சேதுபதி, நடித்து வரும் 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவின் நடந்து வருகிறது. அங்கு வந்த வயதான நடிகை ஒருவர், மருந்து வாங்க பணம் இல்லை என கூறி விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதியை வைத்து 'கண்ணே கலைமானே' படத்தை இயக்கி முடித்த பின் தற்போது சீனு ராமசாமி, விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படம் இயக்குவதில் பிஸியாகியுள்ளார். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 'மாமனிதன்' படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த மூதாட்டி ஒருவர், விஜய் சேதுபதியிடம், தனக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், அதனால் மருந்து வாங்க பணம் வேண்டும் என கூறியுள்ளார். 

இதனை கேட்டதும், விஜய் சேதுபதி உடனடியாக தன்னுடைய மேலாளரிடம்,  பர்ஸை எடுத்து வர சொல்லி, அதில் இருந்து குறிப்பிட்ட தொகையை அவரிடம் கொடுத்தார்.

 

பணத்தை பெற்றுக்கொண்ட பின், ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து, சில அடிகள் சென்ற அவர் திடீர் என மயங்கி கீழே விழுந்தார். உடனே படக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

பிறகு தான் தெரியவந்தது, இறந்தவர் மலையாள நடிகை கவளம் அச்சம்மா என்பதும், இவர் மம்மூட்டி, ஜெயராம் ஆகிய நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் என்பதும். வயது மூப்பு, மற்றும் உடல்நல பிரச்சனைகளால் அவதி பட்டு வந்த இவர், மருந்து வாங்க கூட பணம் இல்லமால் அல்லாடி உயிரை விட்ட சம்பவம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.