எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ”டைப்பிஸ்ட்” கோபு.  

எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ”டைப்பிஸ்ட்” கோபு. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும், பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது சுமார் 82 வயதாகும் இவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் நடிப்பதியில் இருந்து விலகினார்.

திரைப்பட வாய்ப்புகள் வரிசை கட்டி வந்த போதிலும், நாடகத்தின் மீது உள்ள ஈர்ப்பால் சுமார் 600-க்கும் அதிகமான மேடை நாடகங்களை நடத்தியுள்ளார்.1998-இல் ‘ரெய்ஸ் ஆன்’ என்ற நாடகத்தை மீண்டும் நடத்தினார். இந்த நாடகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, இராயப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவருக்கு திடீர் என உடல்நிலை மோசமானதால், உடனடியாக இவரை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இவருடைய குடும்பத்தினர். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்து பல பிரபலங்கள், இவருடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இவருடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.