Official now kamalhaasan joins hand with shankar for Indian2
இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சூர்யா மூவீஸ் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இருபது வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகவுள்ளதாக செய்திகள் கடந்த சிலநாட்களாக வெளிவந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
ஆம், ஷங்கர், கமல் மீண்டும் இணையும் 'இந்தியன் 2' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கில் வெளியான 'தில்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ராஜூ, இவர் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். இந்த நிலையில் அவர் 'இந்தியன்' படத்தையும் தயாரிக்கவுள்ள செய்தி உலகநாயகனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Official now.. @ikamalhaasan joins hand with @shankarshanmugh for #Indian2. Produced by Dil Raju, @SVC_officialpic.twitter.com/XTJkB1lk2I
— Ramesh Bala (@rameshlaus) September 30, 2017
கடந்த சில மாதங்களாக ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கம் மூலமாகவும், ஆளும் அரசை நேரடியாக விமர்சிக்கும் நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதற்காக அடுத்தடுத்த பணிகளில் உள்ள இந்த நேரத்தில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுவதால் தற்போது அரசியல் நிகழ்வுகள் குறித்த காட்சிகள் இந்த படத்தில் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
