Asianet News TamilAsianet News Tamil

கதாநாயகியாகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநராகவும் பணிபுரியும் நடிகை...

‘பிரேமம்’ மலையாளப்படத்தில் படத்தில் கதையின் கடைசி சாப்டர் தேவதையாக வந்த கியூட் அனுபமா பரமேஷ்வரன் தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநராக வேலை பார்க்கும் தகவலை மிகவும் குஷியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 

nupama Parameswaran, is also working as assistant director
Author
Chennai, First Published May 29, 2019, 3:40 PM IST

‘பிரேமம்’ மலையாளப்படத்தில் படத்தில் கதையின் கடைசி சாப்டர் தேவதையாக வந்த கியூட் அனுபமா பரமேஷ்வரன் தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநராக வேலை பார்க்கும் தகவலை மிகவும் குஷியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.nupama Parameswaran, is also working as assistant director

‘பிரேமம்’ அறிமுகத்திற்குப் பின் ஒன்றிரண்டு மலையாளப்படங்கள், தெலுங்குப் படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் தமிழில் ‘கொடி’ படத்தில் மட்டும் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம் சுமாராகவே ஓடிய நிலையில் தமிழில் அவருக்கு வேறு படங்கள் அமையவில்லை.

இந்நிலையில் துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநர் வேலையும் பார்க்கும் செய்தியை இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு உற்சாகமான தொனியில் பகிர்ந்துள்ளார் அனுபமா. அதில்,...துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது புது அனுபவமாக இருக்கிறது. அடுத்தடுத்த தகவல்களுக்கு அப்டேட் செய்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.nupama Parameswaran, is also working as assistant director

படத்தோட அப்டேட்ஸை இப்பிடி ஹீரோயினே ரெகுலரா கொடுப்பாங்கன்னா தனியா ஒரு பி.ஆர்.ஓ. எதுக்கு புரடியூசர் துல்கர் சல்மான் சார். அவரை முதல்ல படத்துல இருந்து கட் பண்ணுங்க?

Follow Us:
Download App:
  • android
  • ios