Asianet News TamilAsianet News Tamil

'நுங்கம்பாக்கம்' படத்திற்கு ஓடிடியால் வந்த விடிவு காலம்!

கடந்த 2016 ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

nungambakkam movie release in ott
Author
Chennai, First Published Sep 4, 2020, 8:58 PM IST

கடந்த 2016 ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை வாயால் கடித்து, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

nungambakkam movie release in ott

இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்‌ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரித்தார். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்கினார். இப்படத்துக்கு‘நுங்கம்பாக்கம்' என பெயரிடப்பட்டது.

இதையடுத்து இந்த சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் இதுகுறித்து திரைப்பட இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த திரைப்படம் யாருடைய மனதையும் புண்படும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை எனவும், சுவாதி அல்லது ராம்குமார் அல்லது காவல் துறையினரை தவறாக சித்தரிப்பதற்காக எடுக்கப்பட படம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

nungambakkam movie release in ott

இந்த படம் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட படம் எனவும், சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தினரிடமும் காவல் துறையினரிடமும் போட்டுக்காட்டிய பிறகே படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு படம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இருப்பினும் சில சட்ட சிக்கல்கள் இருந்ததால், இந்த படம் முடிக்கப்பட்டு 3 வருடம் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. ஆனால் தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டதால், விரைவில் ஓடிடி தளத்தில் இந்த படம்  வெளியாகும் என கூறியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios