பிரபல பின்னணி பாடகியும், பிக்பாஸ் பிரபலமுமான NSK ரம்யா தன்னுடைய 3 மாத குழந்தையை பாட வைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிதாக மக்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இன்றி, வெளியே வந்தவர் பாடகி NSK ரம்யா.  இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்எஸ் கிருஷ்ணனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த ஆண்டு, விஜய் டிவியில் 'நீலக்குயில்' சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சத்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்த தகவலையும் ரம்யா வெளியிட்டார். இவர்களுக்கு குழந்தை பிறந்து 3 மாதமே ஆகும் நிலையில் இவரது குழந்தை பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரம்யா.

ரம்யா ஒரு பாடலை தன்னுடைய குழந்தையை கையில் வைத்து கொண்டு பாட, அவரது குழந்தையும் அம்மாவின் பாட்டை கேட்டு மழலை குரலில் பாட முயற்சிக்கிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த வீடியோ இதோ...