Asianet News TamilAsianet News Tamil

அயல் நாடுகளிலும் அதிர்வலையை ஏற்படுத்திய மெர்சல்... இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே பாராட்டு...

Mersal finds a supporter in Sri Lanka Minister
Now, Mersal finds a supporter in Sri Lanka Minister
Author
First Published Oct 30, 2017, 2:55 PM IST


அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி, , தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவிலும், மற்ற பிற வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

Now, Mersal finds a supporter in Sri Lanka Minister

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இப்படத்தை தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வைகோ முதல்  ராகுல் காந்தி வரை ஒட்டு மொத்தமாக இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயகே பாராட்டு தெரிவித்துள்ளார்.

Now, Mersal finds a supporter in Sri Lanka Minister

இலங்கையை சேர்ந்த பிரபல நடிகரும், அந்நாட்டின் சமூக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சருமான ரஞ்சன் ராமநாயகே, மெர்சல் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். 

மெர்சல் திரைப்படம், அனைத்து அரசியல்வாதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், என்று அவர் கூறியுள்ளார். இதுவொரு ஆக்ஷன் கலந்த மசாலா படமாக இருந்தாலும், மக்களுக்கு நல்ல செய்தியை கூறியிருக்கிறது என்றும், இதற்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லிக்கு, தனது பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அமைச்சர் ரஞ்சன் கூறியுள்ளார். 

#Mersal is a movie that every politician should watch, exposes the medical mafia & gives a great message, Healthcare is not a business

— Ranjan Ramanayake (@RamanayakeR) October 26, 2017

மெர்சல் திரைப்படம், மருத்துவத்துறை மாபியாக்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது, என்று கூறியுள்ள அவர், இப்படத்தில் விஜய் கூறுவது போல், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios