November 2 thiruttupayale - 2 Release Producer Twitter Notification ...

சுசிகணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ‘திருட்டுப்பயலே - 2’ நவம்பர் 2-ஆம் தேதி வெளியாகிறது.

சுசிகணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திருட்டுப்பயலே - 2’.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

பல்வேறு படங்களின் வெளியீட்டால் இப்படம் செப்டம்பர் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. தற்போது ‘நவம்பர் 2-ஆம் தேதி ‘திருட்டுப்பயலே 2’ வெளியாகும்‘ என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையரங்குகள் கேளிக்கை வரியை எதிர்த்து ஸ்டிரைக் அறிவித்து இருப்பதால் நினைத்ததுபோல இந்தப்படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.