'பேட்ட' பட இயக்குநருடன் கூட்டணியை முடித்துக் கொண்ட தனுஷ்... "D40" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!

"பேட்ட" படத்திற்கு பிறகு தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் "D40" என்ற படத்தை இயக்கி வந்தார். இதன் மூலம் ஒரே வருடத்தில் மாமனார், மருமகன் இரண்டு பேரையும் இயக்கிய இயக்குநர் என்ற பெருமை கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்துள்ளது. கேங்ஸ்டர் த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகி வந்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். மேலும்  கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சூப்பர் டீலக்ஸ் அஸ்வந்த் அசோக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர். ஒய் நாட்ஸ் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 64 நாட்களாக லண்டனில் இடைவிடாமல் நடந்து வந்த ஷூட்டிங் இன்றுடன் நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே செட்டியூலாக நீண்ட நாட்கள் நடந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அப்பாடா படம் முடிஞ்சிடுச்சி என்பது போல் தனுஷும், கார்த்திக் சுப்புராஜும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே கொடி இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷ் பிறந்த நாளின் போது வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் "தர்பார்" படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஜெயிக்கப்போவது மாமனாரா, மருமகனா என்ற சுவாரஸ்யம் திரைத்துறையில் தொற்றிக் கொண்டது. இப்போது அந்த வரிசையில் இணைந்துள்ள "D40" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர், டீசர் குறித்த தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.