கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட, டிவி தொகுப்பாளர் தற்போது ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் நடிகர், ராப் பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமையை ரசிகர்களால் அறியப்பட்டவர் நோயல் சீன். பிக்பாஸ் சீசன் 4  தெலுங்கு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனக்கும், தன்னுடைய மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கும் எஸ்தர் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகும் நிலையில், இவருடைய இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நோயல், இருவரும் ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், முறையாக நீதி மன்றத்தில் இருந்து விவாகரத்து கிடைத்த பின்னர் இதனை தெரிவிக்கலாம் என இருந்ததாக தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் தங்களுக்குள் உள்ள நட்பு கடைசி வரை நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக