அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய படம் தீபாவளி ரீலிசாக 25–ந்தேதி அன்று வெளியிடப்பட உள்ளது. ஆகையால் அன்றைய சிறப்பு காட்சிகளுக்கு ஏற்கெனவே பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிகில் உள்ளிட்ட எந்த புதிய படத்திற்கும் சிறப்பு காட்சிகளை வெளியிடக்கூடாது என தமிழக அரசு திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், எந்த படத்திற்கும் இனி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. தடையை மீறும் திரையரங்கு மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் தியேட்டர் உரிமையாளர்கள் அதிக கட்டண வசூலிக்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்தார். 
சிறப்பு காட்சிகள் குறித்து, படக்குழு எந்த அனுமதியும் இன்னும் கேட்கவில்லை, அப்படி கேட்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் கடப்பூர் ராஜு  தெரிவித்தார்.