No scenes have been portrayed in the movie One by One

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் எந்த காட்சிகளும் சித்தரிக்கப்படவில்லை எனவும் அவ்வாறு மக்கள் மனதை புண்படித்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட த்ரில்லர் படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். 

டி.எஸ்.பி தீரன் திருமாறனாகக் கதாநாயகன் கார்த்தியும் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். 

இந்தியா முழுக்கப் பழங்குடியினர் வஞ்சிக்கப்பட்டுவரும் சூழலில், ஒரு குறிப்பிட்ட பழங்குடிச் சமூகத்தையே ஒட்டுமொத்தமாகக் காட்டுமிராண்டிகளாகக் காட்சிப்படுத்தியிருப்பது பெரிய நெருடலாக உள்ளது என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படக்குழுவினர் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதில், இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக படத்தில் சித்தரிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், எந்த ஒரு சமுதாயமும் கொலை கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை எனவும் இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருந்தால் மன்னிப்பு கேட்டுகொள்வதோடு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் மற்றும் இணையதள ஒளிபரப்பில் இருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.